மாவட்ட செய்திகள்

மொரப்பூரில் சிகிச்சையின்போது பெண் சாவு மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு + "||" + The relatives of the woman died in the treatment at Morappur

மொரப்பூரில் சிகிச்சையின்போது பெண் சாவு மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

மொரப்பூரில் சிகிச்சையின்போது பெண் சாவு மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
மொரப்பூரில் மருத்துவமனையில் சிகிச்சையின்போது பெண் இறந்ததால் ஆத்திரம் அடைந்த அவருடைய உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மொரப்பூர்,

தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே உள்ளது சுண்டாங்கிப்பட்டி. இந்த கிராமத்தை சேர்ந்தவர் கார்மேகம். கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி தவமணி (வயது 37). இவர்களுக்கு 4 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

தவமணிக்கு கையில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை பெறுவதற்காக மொரப்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு நேற்று சென்றார். அங்கு அவரை டாக்டர் பரிசோதித்து பார்த்து விட்டு ஊசி போட்டார்.


சிகிச்சை பெற்ற சிறிதுநேரத்திலேயே தவமணி அந்த மருத்துவமனையில் பரிதாபமாக இறந்தார்.

இதைஅறிந்ததும் தவமணியின் உறவினர்கள் மற்றும் கிராமமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தவமணிக்கு தவறான சிகிச்சை அளித்ததால் அவர் இறந்து விட்டார் என்று கூறி அந்த மருத்துவமனையின் முன்பு திரண்டு முற்றுகையிட்டனர். பின்னர் தர்மபுரி-அரூர் பிரிவு ரோட்டில் சாலைமறியலில் ஈடுபட முயன்றனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் அரூர் உதவி கலெக்டர் புண்ணியகோட்டி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். உறவினர்கள் மற்றும் டாக்டரிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. காதல் கணவர், குழந்தையை கொலை செய்தது ஏன்? கைதான மனைவி பரபரப்பு வாக்குமூலம்
ஆற்காடு அருகே பிணங்களை தோண்டி எடுத்து பரிசோதனை செய்தனர். காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவர், குழந்தையை கொன்றது ஏன்? என்பது பற்றி கைதான மனைவி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
2. ரகளை செய்த 11 பேர் கைது: எதிர்ப்பு கோஷம் எழுப்பியவர்கள் குறித்து கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு
திருப்பரங்குன்றம் தேர்தல் பிரசார கூட்டத்தில் ரகளை செய்த 11 பேர் கைது செய்யப்பட்டனர். எதிர்ப்பு கோஷம் எழுப்பியவர்கள் குறித்து கமல்ஹாசன் பரபரப்பாக பேசினார்.
3. கொத்தமங்கலத்தில் பனை ஓலையில் இளைஞர்கள் வைத்த தண்ணீர் பந்தலை ஊராட்சி நிர்வாகம் அகற்றியதால் பரபரப்பு
கொத்தமங்கலத்தில் பனை ஓலையில் பந்தல் அமைத்து அதில் இளைஞர்கள் வைத்த தண்ணீர் பந்தலை ஊராட்சி நிர்வாகம் அகற்றிய தால் பரபரப்பு ஏற்பட்டது.
4. சத்தியமங்கலம் அருகே பரபரப்பு கியாஸ் அடுப்பை பற்றவைத்தபோது சிலிண்டர் தீப்பிடித்து எரிந்தது தீயணைப்பு வீரர்கள் அணைத்ததால் பெரும் விபத்து தவிர்ப்பு
சத்தியமங்கலம் அருகே கியாஸ் அடுப்பை பற்றவைத்தபோது சிலிண்டர் தீப்பிடித்தது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
5. குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் திரண்ட மக்கள் முற்றுகை போராட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பு
குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் திரண்ட கிராம மக்கள், முற்றுகை போராட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.