15 நாட்கள் ‘பரோல்’ முடிவடைந்தது இளவரசி, பெங்களூரு சிறைக்கு திரும்பினார்
15 நாட்கள் ‘பரோல்’ காலம் முடிவடைந்ததை ெதாடர்ந்து இளவரசி, பெங்களூரு சிறைக்கு திரும்பினார்.
பெங்களூரு,
15 நாட்கள் ‘பரோல்’ காலம் முடிவடைந்ததை ெதாடர்ந்து இளவரசி, பெங்களூரு சிறைக்கு திரும்பினார்.
15 நாட்கள் ‘பரோல்’
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு சுமார் 20 மாதங்கள் ஆகின்றன.
தனது கணவரின் உடல்நலக்குறைவு மற்றும் மரணம் ஏற்பட்டதை அடுத்து சசிகலா 2 முறை பரோலில் சென்னை சென்று வந்தார். இந்த நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தனது உறவினரை பார்க்க 15 நாட்கள் பரோல் வழங்குமாறு இளவரசி முதல் முறையாக சிறை நிர்வாகத்திடம் மனு வழங்கினார்.
சிறைக்கு திரும்பினார்
அதை பரிசீலித்து ஏற்றுக்கொண்ட சிறை நிர்வாகம், இளவரசிக்கு நிபந்தனையுடன் 15 நாட்கள் பரோல் வழங்கியது. இதையடுத்து இளவரசி கடந்த அக்டோபர் மாதம் 25-ந் தேதி பரோலில் விடுவிக்கப்பட்டார். அவர் சென்னையில் தங்கியிருந்தார்.
இந்த நிலையில் 15 நாட்கள் பரோல் காலம் முடிவடைந்ததை அடுத்து இளவரசி நேற்று பெங்களூரு சிறைக்கு திரும்பினார். சென்னையில் இருந்து கார் மூலம் பெங்களூருவுக்கு வந்த அவர், மாலை 5.55 மணிக்கு சிறைக்குள் சென்றார். அவருடன் அவரது மகன் விவேக், மகள், மருமகன் மற்றும் உறவினர்கள் வந்திருந்்தனர்.
Related Tags :
Next Story