அடிப்படை வசதி கோரி கண்மாய் கரையில் அமர்ந்து போராட்டம்


அடிப்படை வசதி கோரி கண்மாய் கரையில் அமர்ந்து போராட்டம்
x
தினத்தந்தி 10 Nov 2018 3:30 AM IST (Updated: 10 Nov 2018 3:26 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் அருகே அடிப்படை வசதி செய்து தரக்கோரி கண்மாய்கரையில் அமர்ந்து மக்கள் போராட்டம் நடத்தினர்.

விருதுநகர்,

விருதுநகர் அருகே உள்ள ரோசல்பட்டி பஞ்சாயத்தில் அண்ணாநகர் பகுதியில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி அந்த பகுதி மக்கள் கண்மாய்கரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். எட்வர்டு என்பவர் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 40 பெண்கள் உள்பட 60 பேர் கலந்து கொண்டனர்.

 தகவல் அறிந்த விருதுநகர் பஞ்சாயத்து யூனியன் கமி‌ஷனர் கண்ணன் போராட்டம் நடந்த இடத்துக்கு சென்று இந்த மாத இறுதிக்குள் தேவைப்படும் அடிப்படை வசதிகளை செய்து தருவதாக உறுதி அளித்தார். அதன் பேரில் போராட்டம் முடிவுக்கு வந்தது.


Next Story