மாவட்ட செய்திகள்

தொழிலாளர் நலவாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம்: 16-ந்தேதி நடக்கிறது + "||" + Member Combination Special Camp for Labor Welfare: It's going on 16th

தொழிலாளர் நலவாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம்: 16-ந்தேதி நடக்கிறது

தொழிலாளர் நலவாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம்: 16-ந்தேதி நடக்கிறது
தொழிலாளர் நலவாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை சிறப்புமுகாம் வருகிற 16-ந் தேதி நடக்கிறது.
தஞ்சாவூர்,

கும்பகோணத்தில் தொழிலாளர் நலவாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை சிறப்புமுகாம் வருகிற 16-ந் தேதி நடக்கிறது.

தஞ்சை தொழிலாளர்துறை உதவி ஆணையர்(சமூக பாதுகாப்பு திட்டம்) விஸ்வநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-


பல்வேறு தொழிலாளர் நலவாரியங்களில் தொழிலாளர்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு அரசின் நலத்திட்ட உதவிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாரியங்களில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்த தொழிலாளர்கள் மிக குறைந்த அளவிலேயே உறுப்பினர்களாக சேர்ந்துள்ளதால் சிறப்பு முகாம் நடத்தி அதிகஅளவில் தொழிலாளர்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு வருகின்றனர்.அதன்படி வருகிற 16-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கும்பகோணம் ஸ்ரீநகர் காலனியில் உள்ள தொழிலாளர்துறை துணை ஆய்வாளர் அலுவலகத்தில் உறுப்பினர் சேர்க்கை சிறப்புமுகாம் நடைபெற உள்ளது.

முகாமில் கொத்தனார், சித்தாள், கம்பிபிட்டர் போன்ற கட்டுமான பணி புரிபவர்கள், சுமை தூக்குபவர், சமையல்காரர், ஓட்டுனர், தேங்காய் பறிப்பவர், பதனீர் இறக்குபவர், தெருவோர வியாபாரம் போன்ற பல்வேறு உடலுழைப்பு தொழில் செய்யும் 18 வயது முதல் 59 வயது வரையுள்ள தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்த தொழிலாளர்களும் மற்றும் இதர அனைத்துப்பிரிவினரும் முகாமில் கலந்து கொண்டு இலவசமாக உறுப்பினராக பதிவு செய்து கொள்ளலாம்.

உறுப்பினர்களாக பதிவு செய்ய வரும் தொழிலாளர்கள் தங்களது விண்ணப்பத்தில் கிராம நிர்வாக அலுவலரிடம் கையொப்பம் பெற்று, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களில் சான்றொப்பம் பெற வேண்டும். இவற்றுடன் புகைப்படம்-2, தேசியமயமாக்கப்பட்ட சேமிப்பு வங்கி கணக்கு புத்தகத்தின் முதல்பக்க நகலுடன் நேரில் வர வேண்டும்.

பழைய உறுப்பினர்கள், ஆதார் எண்ணை நலவாரிய அட்டையுடன் இணைக்க தவறியவர்கள் இந்த முகாமை பயன்படுத்தி ஆதார் அட்டைநகல் மற்றும் நலவாரிய அட்டைநகல் ஆகிய ஆவணங்களுடன் நேரில் வர வேண்டும். புதுப்பித்தலுக்கும் விண்ணப்பம் பெறப்படும். இது தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய 04362-264549 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.