மொரப்பூர் ஒன்றிய தி.மு.க. சார்பில் கொங்கு பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் முன்னாள் அமைச்சர் வ.முல்லைவேந்தன் வழக்கினார்


மொரப்பூர் ஒன்றிய தி.மு.க. சார்பில் கொங்கு பள்ளி மாணவர்களுக்கு  நிலவேம்பு கசாயம் முன்னாள் அமைச்சர் வ.முல்லைவேந்தன் வழக்கினார்
x
தினத்தந்தி 10 Nov 2018 10:15 PM GMT (Updated: 11 Nov 2018 12:51 PM GMT)

முன்னாள் அமைச்சர் வ.முல்லைவேந்தன் பள்ளி மாணவ. மாணவிகளுக்கு டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தக்கூடிய நிலவேம்பு கசாயத்தை வழங்கினார்.

மொரப்பூர் , 

தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் ஒன்றிய தி.மு.க. சார்பில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தக்கூடிய நிலவேம்பு கசாயம் வழங்கும் விழா மொரப்பூர் கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சர் வ.முல்லைவேந்தன் தலைமை வகித்து பள்ளி மாணவ. மாணவிகளுக்கு டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தக்கூடிய நிலவேம்பு கசாயத்தை வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர் இ.டி.டி.செங்கண்ணன், முன்னாள் ஒன்றிய செயலாளர் பொன்னுசாமி, நிர்வாகிகள் சிட்டி முருகேசன், செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

டெங்கு காய்ச்சலின் தடுப்பு முறைகள், நிலவேம்பு கசாயம் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பேசினார்கள். கொங்கு கல்வி அறக்கட்டளை தலைவர் சந்திரசேகர், செயலாளர் அ.மோகன்ராசு, பொருளாளர் பி.வரதராஜன், மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் க.இளங்கோ, கல்லூரி தாளாளர் தீர்த்தகிரி மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் திருமால், பழனியம்மாள் மகாலிங்கம், சிங்காரிபழனி, மேகராஜ், நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் பொன்.முருகன் நன்றி கூறினார்.

இதனை தொடர்ந்து விஸ்வபாரதி மெட்ரிக் மேல்நிலைப்பபள்ளி, மொரப்பூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளிலும் நில வேம்பு கசாயம் வழங்கப்பட்டது.


Next Story