மாவட்ட செய்திகள்

கீழ்பென்னாத்தூர் அருகே மொபட் மோதி முதியவர் பலி + "||" + Near Geybendanathur Moped murdered old man

கீழ்பென்னாத்தூர் அருகே மொபட் மோதி முதியவர் பலி

கீழ்பென்னாத்தூர் அருகே
மொபட் மோதி முதியவர் பலி
கீழ்பென்னாத்தூரை அடுத்த கொளத்தூரை சேர்ந்தவர் அண்ணாமலை மீது மொபட் எதிர்பாராதவிதமாக மோதி உயிரிழந்தார்.
கீழ்பென்னாத்தூர், 

கீழ்பென்னாத்தூரை அடுத்த கொளத்தூரை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 70). இவர் ரேஷன்கார்டு கேட்டு கீழ்பென்னாத்தூர் தாலுகா அலுவலகத்தில் மனு கொடுக்க சென்றார். அதன்பின் ஊருக்கு திரும்ப பஸ் நிறுத்தத்தை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார் அப்போது பின்னால் வந்த மொபட் அவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த அண்ணாமலை சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கீழ்பென்னாத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வெவ்வேறு விபத்துகளில் லாரி டிரைவர் உள்பட 2 பேர் பலி
திண்டுக்கலில் வெவ்வேறு விபத்துகளில் லாரி டிரைவர் உள்பட 2 பேர் பலியாகினர்.
2. தாராபுரம் அருகே பரிதாபம்: சாலையோரம் நடந்து சென்றவர்கள் மீது கார் மோதியது; சிறுமி பலி
தாராபுரம் அருகே சாலையோரம் நடந்து சென்றவர்கள் மீது கார் மோதியது. இந்த விபத்தில் சிறுமி பலியானாள். குழந்தை உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
3. தனித்தனி விபத்தில் வியாபாரி உள்பட 3 பேர் பலி
தனித்தனி விபத்தில் வியாபாரி உள்பட 3 பேர் பலியானார்கள்.
4. தாளவாடி அருகே திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்தது; டிரைவர் பலி
தாளவாடி அருகே திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்ததில் டிரைவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தில் கிளீனருக்கு படுகாயம் ஏற்பட்டது.
5. திருப்பூரில் மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதல்; 2 பேர் பலி
திருப்பூரில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள்.