டெங்கு கொசு உற்பத்தி: ஜவுளி கடை உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்


டெங்கு கொசு உற்பத்தி: ஜவுளி கடை உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்
x
தினத்தந்தி 11 Nov 2018 3:30 AM IST (Updated: 11 Nov 2018 1:05 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில் டெங்கு கொசுக்களை உற்பத்தியாகும் வகையில் பொருட்கள் வைத்திருந்த ஜவுளி கடை உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட டெங்கு கொசு ஒழிப்பு சிறப்பு கண்காணிப்பு அலுவலர் விஜயகுமார் தலைமையில், மாவட்ட பூச்சியியல் வல்லுநர் பழனிச்சாமி, நகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள் ராமச்சந்திரன், தங்கராம் ஆகியோர் பனகல் சாலை, நேதாஜி சாலை ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தனர்.

அப்போது கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் சுற்றுப்புறத்தை அசுத்தமாக வைத்திருந்த ஜவுளிக்கடை உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப் பட்டது.

இதனை தொடர்ந்து வீடு, வணிக நிறுவனங்களில் பார்வையிட்டு தேவையற்ற குப்பைகளை பொது இடங்களில் கொட்ட கூடாது. பயன்பாடற்ற பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினர். டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கையில் சுற்றுப்புறத்தை முறையாக பராமரிக்காத வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் என மொத்தம் 2,500 பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.6 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story