கிருஷ்ணகிரி பகுதியில் மணல் கடத்திய 2 பேர் கைது லாரி, டிராக்டர் பறிமுதல்


கிருஷ்ணகிரி பகுதியில் மணல் கடத்திய 2 பேர் கைது லாரி, டிராக்டர் பறிமுதல்
x
தினத்தந்தி 12 Nov 2018 3:45 AM IST (Updated: 11 Nov 2018 10:44 PM IST)
t-max-icont-min-icon

மணலை கடத்தியதாக பாலகிருஷ்ணன் (வயது 28), மணி (28) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் லாரியை பறிமுதல் செய்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமுதா மற்றும் போலீசார் துறிஞ்சிப்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்த போது அதில் 2 யூனிட் மணல் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து மணலை கடத்தியதாக துறிஞ்சிப்பட்டியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 28), தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள போடரப்பள்ளியைச் சேர்ந்த மணி (28) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் லாரியை பறிமுதல் செய்தனர். இதேபோல தாவலம் பகுதியில் தாலுகா போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சாலையோரம் நின்றிருந்த டிராக்டரை சோதனை செய்த போது அதில் 1 யூனிட் மணல் தென்பெண்ணை ஆற்றில் இருந்து கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story