நந்தம்பாக்கத்தில் கோதண்டராமர் கோவில் குளத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை


நந்தம்பாக்கத்தில் கோதண்டராமர் கோவில் குளத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 13 Nov 2018 4:00 AM IST (Updated: 13 Nov 2018 12:23 AM IST)
t-max-icont-min-icon

சென்னையை அடுத்த நந்தம் பாக்கத்தில் பழமையான கோதண்டராமர் கோவில் உள்ளது. இதன் அருகில் இந்த கோவிலுக்கு சொந்தமான குளம் உள்ளது.

ஆலந்தூர்,

நந்தம்பாக்கம் பேரூராட்சியாக இருந்தபோது கடந்த 2010-ம் ஆண்டு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ரூ.7 லட்சத்து 35 ஆயிரம் செலவில் இந்த குளத்தை சுற்றிலும் சுவர் அமைத்து, பொதுமக்கள் நடைபயிற்சி செய்ய வசதியாக இரும்பு தடுப்பு வேலியுடன் நடை பாதைகள் அமைக்கப்பட்டது.

ஆனால் தற்போது கோவில் குளத்தில் பொதுமக்கள் நடைபயிற்சி செய்ய அமைக்கப்பட்ட இரும்பு தடுப்பு வேலிகள் சில இடங்களில் உடைந்து உள்ளது. கோவில் குளம் சரியாக தூர்வாரப்படாததால் குப்பை கொட்டும் பகுதியாக மாறிவிட்டது.

எனவே சென்னை மாநகராட்சி அதிகாரிகள், இந்த கோவில் குளத்தை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story