நொளம்பூரில் 5-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை; 3 சிறுவர்கள் கைது
நொளம்பூரில் 5-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 3 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.
அம்பத்தூர்,
சென்னை முகப்பேரை அடுத்துள்ள நொளம்பூரை சேர்ந்த 11 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். இதே பகுதியில் உள்ள மூன்று சிறுவர்கள் இந்த சிறுமியிடம் தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வந்து உள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட மாணவி இதுபற்றி தனது தாயாரிடம் கண்ணீர் மல்க கூறினார்.
இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது, அதே பகுதியில் இவர்கள் வீட்டுக்கு அருகில் இருந்த 14, 15 மற்றும் 17 வயது கொண்ட மூன்று சிறுவர்கள் அந்த சிறுமிக்கு பல முறை பாலியல் தொல்லை அளித்தது தெரியவந்தது.
மேலும், இவர்கள் பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு ஊரைச் சுற்றி வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து சிறுவர்கள் 3 பேரையும் போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். பின்னர் மூவரையும் கீழ்ப்பாக்கம் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

Related Tags :
Next Story