நெல்லையில் 2,394 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் அமைச்சர் ராஜலட்சுமி வழங்கினார்
நெல்லையில் 2 ஆயிரத்து 394 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை அமைச்சர் ராஜலட்சுமி வழங்கினார்.
நெல்லை,
தமிழக அரசின் சார்பில் பிளஸ்-1 படிக்கின்ற மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது. நெல்லை டவுன் கல்லணை மகளிர் மேல்நிலைப்பள்ளி, மீனாட்சிபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, பேட்டை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, மந்திரமூர்த்தி மேல்நிலைப்பள்ளி, ம.தி.தா. இந்து கல்லூரி மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 7 பள்ளிக்கூடங்களில் படிக்கின்ற 2 ஆயிரத்து 394 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நேற்று நெல்லை டவுன் கல்லணை மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கினார். விஜிலா சத்யானந்த் எம்.பி,, இன்பதுரை எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலா வரவேற்று பேசினார்.
அமைச்சர் ராஜலட்சுமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, 2 ஆயிரத்து 394 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி பேசினார்.
அப்போது, அவர் பேசுகையில், தமிழக அரசு பள்ளி, கல்லூரி மாணவர்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதை மாணவர்கள் பயன்படுத்தி நன்றாக படிக்க வேண்டும். கல்வியிலும், விளையாட்டிலும் சிறந்து விளங்க வேண்டும். பெண்களின் உயர்கல்வியை ஊக்குவிக்க ஜெயலலிதா பல திட்டங்களை செயல்படுத்தினார். இதனால் தமிழகத்தில் பெண்கள் அதிக அளவில் உயர்கல்வி கற்கிறார்கள். கல்வியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க அவர்களுக்கு வேலை வாய்ப்பில் 3 சதவீதம் இடஒதுக்கீடு தமிழக அரசு வழங்கி உள்ளது என்றார்.
விழாவில் நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா, அமைப்பு செயலாளர் சுதாபரமசிவன், பல்லிக்கோட்டை செல்லத்துரை, சிறுபான்மை பிரிவு செயலாளர் மகபூப்ஜான், பேரவை செயலாளர் ஜெரால்டு, சமூக பாதுகாப்பு தாசில்தார் மாரியப்பன், வருவாய் ஆய்வாளர் அருணாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தலைமை ஆசிரியர் நாச்சியார் என்ற ஆனந்தபைரவி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story