அனந்தகுமார் மறைவுக்கு கர்நாடக அரசியல் தலைவர்கள் இரங்கல் ‘அரசியல் எதிரிகளுடனும் நட்பு பாராட்டியவர்’ என குமாரசாமி புகழாரம்
அனந்தகுமார் மறைவுக்கு கர்நாடக அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ‘அரசியல் எதிரிகளுடனும் நட்பு பாராட்டியவர்’ என குமாரசாமி புகழாரம் சூட்டினார்.
பெங்களூரு,
மத்திய மந்திரி அனந்தகுமாரின் மறைவுக்கு கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மத்திய மந்திரி அனந்த குமார் மரணம் எனக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய மந்திரியாக பணியாற்றியபோது, அவர் நாட்டுக்கு சிறந்த முறையில் சேவையாற்றினார். நாட்டின் வளர்ச்சியில் அவர் தனது பங்களிப்பை வழங்கினார். மக்களுக்கு ஆதரவான நடவடிக்கைகள் மூலம் பெங்களூரு மக்களை அவர் வெகுவாக கவர்ந்தார்.
அரசியலை தாண்டி எங்கள் குடும்பம், அவருடன் சிறந்த முறையில் நட்பு வைத்திருந்தது. நட்புக்கு முன்னுரிமை கொடுத்தார். ஒரு மதிப்புமிக்க அரசியல்வாதி. அரசியல் எதிரிகளுடனும் நட்பு பாராட்டியவர். நான் எனது சிறந்த நண்பரை இழந்துவிட்டேன். அவரது மறைவால் துக்கத்தில் இருக்கும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா தனது இரங்கல் செய்தியில், “அனந்த குமார் எளிமையான அரசியல்வாதி. சிறந்த நிர்வாகி. மத்திய மந்திரியாக இருந்தபோது, அவர் கர்நாடக பிரச்சினைகளை தீா்த்து வைப்பதில் அதிக கவனம் செலுத்தினார். எனக்கும், அவருக்கும் இடையே நட்பு நல்ல முறையில் இருந்தது. அவரது மறைவால், நாட்டுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்பட்டுள்ளது” என்றார்.
கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா கூறுகையில், “மத்திய அரசு மற்றும் கர்நாடக அரசுக்கு இடையே இரு தரப்பையும் இணைக்கும் வகையில் அனந்தகுமார் இரும்பு பாலம் போல் செயல்பட்டார். கர்நாடகத்தில் பா.ஜனதாவின் வளர்ச்சிக்கு அனந்தகுமார் முக்கிய காரணம் ஆவார். 6 முறை எம்.பி.யாக இருந்துள்ளார். பெங்களூருவில் சர்வதேச விமான நிலையம் அமைத்தது, மெட்ரோ ரெயில் திட்டம் அமல்படுத்தப்பட்டதில் அனந்தகுமாரின் பங்கு மகத்தானது. எளிைமயான அரசியல்வாதியை இழந்துவிட்டோம்” என்றார்.
துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், “மத்திய மந்திரி அனந்தகுமார் மரணம், கர்நாடகத்திற்கு நிரப்ப முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்திவிட்டது. தேர்தலில் தோல்வியே தழுவாத தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். எங்களுக்கு இடையே கொள்கை வேறுபாடு இருந்தாலும், பொது வாழ்க்கையில் அவர் ஒரு முன்மாதிரி தலைவராக திகழ்ந்துள்ளார்” என்று கூறி இருக்கிறார்.
நாடாளுமன்ற காங்கிரஸ் குழு தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், “மதிப்புமிக்க ஒரு தலைவரை நாடு இழந்துவிட்டது. நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரியாக அவர் நாடாளுமன்ற விவாதங்களை நல்ல முறையில் நடத்த முயற்சி செய்தார். அனந்தகுமாரின் மறைவால் கர்நாடக மக்கள் துயரத்தில் வாடுகிறார்கள். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
ஜனதா தளம்(எஸ்) மாநில தலைவர் எச்.விஸ்வநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சில நாட்களுக்கு முன்பு தான் வாஜ்பாயின் அஸ்தியை விமான நிலையத்தில் இருந்து பெற்று வந்தார். இப்போது அவரது அஸ்தியை கரைக்கும் நிலை வந்துவிட்டது. இதை கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. அனந்தகுமாரின் மறைவு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது” என்றார்.
கர்நாடக மேல்-சபை தற்காலிக தலைவர் பசவராஜ் ஹொரட்டி வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், “அனந்தகுமாரின் மறைவு இந்திய நாடாளுமன்றத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்இந்தியாவில் குறிப்பாக கர்நாடகத்தில் பா.ஜனதாவை வளர்க்க பாடுபட்டார். கட்சி பேதங்களை மறந்து கர்நாடக திட்டங்களுக்கு அனுமதி பெற்று தந்தார்” என்று தெரிவிக்கப்பட்டடு்ள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த என்.மகேஷ் எம்.எல்.ஏ. கூறுகையில், “30 ஆண்டு அரசியல் வாழ்க்கையில் முதல் முறையாக அனந்தகுமாரை சந்தித்து பேச வாய்ப்பு கிடைத்தது. ஒரே நாள் சந்திப்பில் 30 ஆண்டுகள் அறிமுகம் எனக்கு கிடைத்தது. என்னிடம் அவர் அன்புடன் பேசினார். ஒரே சந்திப்பில் அவரிடம் இருந்து அதிகளவில் கற்றுக்கொண்டேன். இந்த துக்கத்தை தாங்கும் சக்தியை அவரது குடும்பத்திற்கு இறைவன் வழங்கட்டும்” என்றார்.
அனந்தகுமாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு மந்திரி ஜமீர்அகமதுகான் நிருபர்களிடம் கூறுகையில், “நான் முதல் முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்ந்ெதடுக்கப்பட்டபோது, அனந்தகுமார் எம்.பி.யாக இருந்தார். அப்போது எனக்கு அவர் அரசியலில் வழிகாட்டி ஆலோசனைகளை வழங்கினார். எனது தொகுதியில் எந்த விழாவாக இருந்தாலும், கட்சி பேதங்களை மறந்து அதில் பங்கேற்றார். இவ்வளவு சீக்கிரமாக நம்மை விட்டு செல்வார் என்று நான் நினைக்கவில்லை” என்றார்.
நடிகர் அம்பரீஷ், அஞ்சலி செலுத்திய பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், “அனந்தகுமார் என்னுடன் நட்பில் இருந்தார். கட்சி வேறாக இருந்தாலும், எங்கள் நட்பில் எந்த பிரச்சினையும் இருக்கவில்லை. மத்தியில் நாங்கள் இருவரும் அதிகளவில் ஒன்றாக பணியாற்றிய தருணங்கள் உண்டு. நல்ல அரசியல்வாதி, நண்பரை இழந்துவிட்டேன்” என்றார்.

Related Tags :
Next Story