மாவட்ட செய்திகள்

தம்பியை தாக்கியவர்களை தட்டிக்கேட்ட வாலிபருக்கு அரிவாள் வெட்டு தந்தை-மகன் உள்பட 3 பேர் கைது + "||" + 3-year-old sibling, father-son arrested for slapping youngsters

தம்பியை தாக்கியவர்களை தட்டிக்கேட்ட வாலிபருக்கு அரிவாள் வெட்டு தந்தை-மகன் உள்பட 3 பேர் கைது

தம்பியை தாக்கியவர்களை தட்டிக்கேட்ட வாலிபருக்கு அரிவாள் வெட்டு தந்தை-மகன் உள்பட 3 பேர் கைது
சேதுபாவாசத்திரம் அருகே தம்பியை தாக்கியவர்களை தட்டிக்கேட்ட வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதைதொடர்பாக தந்தை-மகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சேதுபாவாசத்திரம்,

சேதுபாவாசத்திரம் அருகே உள்ள செல்லப்பிள்ளையார் கோவிலை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன்கள் ரஞ்சித்குமார்(22), அஜீத் குமார் (வயது20). அதே பகுதியை சேர்ந்த சுசேந்திரன் (22) என்பவருக்கும், அஜீத்குமாருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.


இந்த நிலையில் நேற்று முன்தினம் சுசேந்திரன், அஜீத்குமாரை தகாத வார்த்தை களால் திட்டியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அஜீத்குமாரை சுசேந்திரன், அவரது தந்தை மூர்த்தி(45), உறவினர்கள் லெட்சுமி, பிரகாஷ்(22) ஆகியோர் தாக்கினர்.

அப்போது அங்கிருந்த அஜீத்குமாரின் அண்ணன் ரஞ்சித்குமார் அவர்களை தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த சுசேந்திரன், ரஞ்சித்குமாரை அரிவாளால் வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பேராவூரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்த புகாரின் பேரில் சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுசேந்திரன், மூர்த்தி, பிரகாஷ் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் லெட்சுமி என்ற பெண்ணை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. குடும்ப தகராறில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு கணவர்-மாமியாருக்கு வலைவீச்சு
மயிலாடுதுறை அருகே குடும்ப தகராறில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக கணவர்-மாமியாரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
2. கூலித்தொழிலாளியை அரிவாளால் வெட்டிய வழக்கு: அண்ணன், தம்பி கைது
கூத்தாநல்லூர் அருகே கூலித்தொழிலாளியை அரிவாளால் வெட்டிய வழக்கில் அண்ணன்-தம்பியை போலீசார் கைது செய்தனர்.