சென்னையில் மின்சார வாரிய தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி 500-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் கைது


சென்னையில் மின்சார வாரிய தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி 500-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் கைது
x
தினத்தந்தி 14 Nov 2018 4:30 AM IST (Updated: 14 Nov 2018 2:08 AM IST)
t-max-icont-min-icon

சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகம் அருகே மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் நேற்று ‘திடீர்’ போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை,

மின் ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யூ.) நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தகவல் அறிந்து வந்த போலீசார் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், போராட்டக்காரர்கள் அருகில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தை முற்றுகையிட முயற்சித்தனர். இதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

முன்னதாக போராட்டம் குறித்து அமைப்பின் தலைவர் எஸ்.எஸ்.சுப்பிரமணி கூறுகையில், “மின்சார வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும் தினக்கூலி ரூ.380 முறையாக வழங்கப்படுவதே இல்லை. அதேபோல எங்களுக்கு ‘போனஸ்’ தொகையும் வழங்கப்படவில்லை. இதை கண்டித்து போராட்டம் நடைபெறுகிறது. மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் அடையாளம் காணப்பட வேண்டும். எங்களுக்கு தீபாவளி ‘போனஸ்’ மற்றும் ஆண்டுக்கு ரூ.4 ஆயிரம் கருணைத்தொகை வழங்கப்பட வேண்டும்”, என்றார்.

Next Story