செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் சுப்பிரமணியர், வள்ளி- தெய்வானை திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் தரிசனம்
செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் சுப்பிரமணியர், வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்
பாடாலூர்,
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியம் செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி நேற்று முன்தினம் சூரசம்ஹாரம் நடைபெற்றது. நேற்று காலை ஏகாம்பரேஸ்வரர் கோவில் கொடி மரம் அருகே சுப்பிரமணியர், வள்ளி-தெய்வானை ஆகிய தெய்வங்கள் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் திருக் கல்யாணம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் செட்டிகுளம், சத்திரமனை, வேலூர், குரூர், மாவலிங்கை, நாட்டார்மங்கலம், சீதேவிமங்கலம், பாடாலூர், இரூர், ஆலத்தூர்கேட், நாரணமங்கலம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங் களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டுசாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் யுவராஜு, தக்கார் பாரதிராஜா, கந்தசஷ்டி விழாக் குழுத் தலைவர் வெங்கடாஜலபதி, செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் செய்திருந்தனர் இன்று (வியாழக்கிழமை) விடையாற்றி உற்சவத்துடன் கந்தசஷ்டி விழா நிறைவு பெறுகிறது.
இதேபோல் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம்-விளந்தையில் அழகு சுப்பிரமணியர் கோவிலில் கந்தசஷ்டியையொட்டி நேற்று முன்தினம் சூரசம்ஹாரம் நடைபெற்றது. முன்னதாக முருகப்பெருமானுக்கு மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங் களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மாலை முக்கிய நிகழ்வான சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சிக்கு வீரபாகு, காளி, தேவர்கள், எமதர்மன், இந்திரன், இந்திராணி, நாரதர் போன்று பக்தர்கள் வேட மணிந்து அம்மனிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு முருகப்பெருமான் நரகாசூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்வு நடைபெற்றது. இதில் விளந்தை, ஆண்டிமடம், கவரப்பாளையம், சூரக்குழி, கொளப்பாடி மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். நேற்று முத்துப்பல்லக்கில் சாமி திரு வீதிஉலா நடைபெற்றது. இன்று (வியாழக்கிழமை) மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது.
Related Tags :
Next Story