திருவாரூர் தியாகராஜர் கோவிலில், 3-வது கட்டமாக சிலைகளின் தொன்மை குறித்து தொல்லியல் துறையினர் ஆய்வு


திருவாரூர் தியாகராஜர் கோவிலில், 3-வது கட்டமாக சிலைகளின் தொன்மை குறித்து தொல்லியல் துறையினர் ஆய்வு
x
தினத்தந்தி 14 Nov 2018 10:45 PM GMT (Updated: 14 Nov 2018 7:25 PM GMT)

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் 3-வது கட்டமாக சிலைகளின் தொன்மை குறித்து தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

திருவாரூர், 

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் தஞ்சை, நாகை, திருவாரூர் மற்றும் கடலூர் மாவட்டங்களை சேர்ந்த 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிலைகள் உள்ளன. இந்த சிலைகளின் தொன்மை நிலை குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் தொல்லியல் துறையினர் கடந்த மாதம் ஆய்வினை தொடங்கினர். 2-வது கட்டமாக ஆய்வு முடிவடைந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று திருவாரூர் சிலை பாதுகாப்பு மையத்தில் 3-வது கட்டமாக ஆய்வு தொடங்கியது. அப்போது பத்தூர் விசுவநாதசுவாமி கோவில், திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் கோவில், அம்மையப்பன் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், எருக்காட்டூர் சீனிவாச பெருமாள் கோவில், திருக்குவளை திருமேனிநாதர் சுவாமி கோவில் உள்பட 19 கோவில்களின் சிலைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆய்வை தொல்லியல் துறை தென் மண்டல இயக்குனர் நம்பிராஜன் தலைமையில், 15-க்கும் மேற்பட்ட தொல்லியல் துறையினரும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பழனிசெல்வம், மலைச்சாமி ஆகியோர் தலைமையில், 33 சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும் மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆய்வு நாளை (வெள்ளிக்கிழமை) வரை நடைபெறுகிறது.

Next Story