கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்தாளுனர்கள் ஆர்ப்பாட்டம் நாகையில் நடந்தது


கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்தாளுனர்கள் ஆர்ப்பாட்டம் நாகையில் நடந்தது
x
தினத்தந்தி 16 Nov 2018 4:00 AM IST (Updated: 16 Nov 2018 12:21 AM IST)
t-max-icont-min-icon

கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில் மருந்தாளுனர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுனர் சங்கம் சார்பில் நாகை அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் ஜூலைக்கா தலைமை தாங்கினார். மருந்தாளுனர் சங்க நிர்வாகிகள் பாஸ்கரன், பார்வதிதேவி, சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் செல்வராஜ், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் அந்துவன் சேரல், செயலாளர் அன்பழகன், வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் இளவரசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

மக்கள் நலன் கருதி 1948-ம் ஆண்டு மருந்தியல் சட்ட விதிப்படி துணை சுகாதார மையங்களில் தொற்றுநோய் தடுப்பு மருந்துகளை கையாள மருந்தாளுனரை நியமிக்க வேண்டும். தலைக்காயம் மற்றும் விபத்து அவசர சிகிச்சை பிரிவு மருந்தகங்கள் 24 மணி நேரம் இயங்க வேண்டும்.

கூடுதல் பணியிடங்கள்

கூடுதல் பணியிடங்களை உருவாக்கி மருந்தாளுனரை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதில் அரசு செவிலியர் சங்க தலைவர் ஜீவானந்தம், அரசு ஊழியர் சங்க வட்ட செயலாளர் தமிழ்வாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் பாஸ்கரன் நன்றி கூறினார்.

Next Story