கூட்டுறவு சங்க அலுவலகத்தை முற்றுகை


கூட்டுறவு சங்க அலுவலகத்தை முற்றுகை
x
தினத்தந்தி 15 Nov 2018 10:30 PM GMT (Updated: 15 Nov 2018 8:11 PM GMT)

கூட்டுறவு சங்க அலுவலகத்தை அனைத்து கட்சியை சேர்ந்தவர்கள் திடீரென முற்றுகையிட்டனர்.

களியக்காவிளை,

களியக்காவிளை அருகே குறுமத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் உள்ளது. இந்த கூட்டுறவு சங்கத்தில் இ-சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் இ-சேவை மையத்தில் பணிபுரிந்த ஒருவருக்கு பணி மறுக்கப்பட்டது. இதனால் இ-சேவை மையம் செயல்படாமல் முடங்கியதாக தெரிகிறது.

இதனையடுத்து கூட்டுறவு சங்க அலுவலகத்தை அனைத்து கட்சியை சேர்ந்தவர்கள் திடீரென முற்றுகையிட்டனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மார்த்தாண்டம் வட்டார செயலாளர் அனந்தசேகர், அ.தி.மு.க.வை சேர்ந்த டைட்டஸ், களியக்காவிளை பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர்கள் சதீஷ் சந்திர பிரசாத், தேவராஜ், விஜயேந்திரன், மேல்புறம் ஒன்றிய ம.தி.மு.க. செயலாளர் ஆன்றணி, பா.ஜ.க. கோபகுமார், தி.மு.க. சுதீர் உள்பட பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்து விரைந்து வந்த களியக்காவிளை போலீசார், போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இதில் அவர்கள் சமதானம் அடையவில்லை. பின்னர் கூட்டுறவுத்துறை கள அலுவலர் கிரிஜா வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அவரிடம், இ-சேவை மையம் செயல்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். உடனே, உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரி உறுதி அளித்தார். இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

Next Story