நுகர்பொருள் வாணிப கழக அலுவலகத்தை முற்றுகையிட்டு சுமை தூக்கும் தொழிலாளர்கள் போராட்டம்


நுகர்பொருள் வாணிப கழக அலுவலகத்தை முற்றுகையிட்டு சுமை தூக்கும் தொழிலாளர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 15 Nov 2018 9:30 PM GMT (Updated: 15 Nov 2018 9:16 PM GMT)

திருவள்ளூரை அடுத்த பெரியக்குப்பம் பகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் மண்டல அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் முன்பு நேற்று சுமை தூக்குவோர் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர்,

இந்த போராட்டத்திற்கு சுமை தூக்குவோர் சங்கத்தின் மாநில பொருளாளர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் முனுசாமி, துணைத்தலைவர் சேகர், துணை செயலாளர் கிரேன், மாவட்ட பொருளாளர் சகாதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அப்போது 100-க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் கலந்து கொண்டு இறந்து போன பள்ளிப்பட்டை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளி வெங்கடேசலு குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்க வேண்டும், அவரது மனைவிக்கு வேலை வழங்க வேண்டும், தொழிலாளர்கள் விரோத போக்கை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள். பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story