வாகன விபத்து இழப்பீடு வழக்குகளுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் முதன்மை மாவட்ட நீதிபதி அறிவுரை
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் வாகன விபத்து இழப்பீடு வழக்குகளுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என்று திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிபதி அல்லி அறிவுறுத்தினார்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கோர்ட்டுகளில் தேசிய மக்கள் நீதிமன்றம் அடுத்த மாதம் (டிசம்பர்) 8-ந் தேதி நடைபெற உள்ளது. திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்குகளை எடுத்து தீர்வு காணும் வகையில் ஆலோசனைக்கூட்டம் நேற்று மாலை திருப்பூர் மாவட்ட கோர்ட்டில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும், முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியுமான அல்லி தலைமை தாங்கினார்.
2-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி முகமது ஜியாபுதீன், 3-வது கூடுதல் மாவட்ட நீதிபதி கருணாநிதி, தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஜெகநாதன், திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் குழு செயலாளரும், முதன்மை சார்பு நீதிமன்ற நீதிபதியுமான அழகேசன், சார்பு நீதிமன்ற நீதிபதிகள் சரவணக்குமார், சுரேஷ்குமார், புவனேஸ்வரி, மீனாட்சி, சுந்தரம், திருப்பூர் மாவட்ட கோர்ட்டு மேலாளர் திருநாவுக்கரசு ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இன்சூரன்சு நிறுவன அதிகாரிகள், அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள், மோட்டார் வாகன விபத்தில் சிக்கிய மனுதாரரின் வக்கீல்கள், இன்சூரன்சு நிறுவன தரப்பு வக்கீல்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் போது, மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்குகளை அதிக அளவில் எடுத்து தேசிய மக்கள் நீதிமன்றத்தில் தீர்வு காண்பதுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு தொகைகளையும் விரைந்து வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி அல்லி அறிவுறுத்தினார்.

Related Tags :
Next Story