கஜா புயலின் தாக்கத்தினால் திருவாரூர் மாவட்டத்தில் கடும் சேதம்
கஜா புயலின் தாக்கத்தினால் திருவாரூர்் மாவட்டத்தில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது.
திருவாரூர்,
கஜா புயலின் தாக்கத்தினால் திருவாரூர் மாவட்டத்தில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. செல்போன் கோபுரங்கள் முறிந்து விழுந்து தொலை தொடர்பு பல இடங்களில் துண்டிக்கப்பட்டது. மரங்கள் வேரோடு சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கஜா புயல் நேற்று அதிகாலை 3 மணியளவில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் கரையை கடந்தது. இதன் எதிரொலியாக திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. இதன் காரணமாக திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, மன்னார்குடி என மாவட்டம் முழுவதும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
திருவாரூர் பகுதியில் புயல் காற்று வீசத் தொடங்கியவுடன் மின் இணைப்பு துண்டிப்பட்டது. திருவாரூர் விஜயபுரத்தில் செல்போன் கோபுரங்கள் முறிந்து விழுந்ததால் தொலை தொடர்பு துண்டிக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் வீடுகளின் மீது மரங்கள் விழுந்ததால் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்து உள்ளது.
மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மரங்கள் அதிக அளவில் முறிந்து விழுந்ததாலும், வேரோடு சாய்ந்ததாலும் சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏராளமான கடைகள் மீதும் மரங்கள் விழுந்து சேதம் அடைந்துள்ளது.
திருவாரூர் மாவட்டம் முழுவதும் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மின்சாரம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் மரங்கள் முறிந்து விழுந்து மின்சார கம்பங்கள் சேதம் அடைந்துள்ளது.
மாவட்ட நிர்வாகம் சார்பில் மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. முக்கிய சாலைகளில் விழுந்த மரங்களை நகராட்சி பணியாளர்கள், தீயணைப்பு துறையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து அப்புறப்படுத்தி வருகின்றனர்.
திருவாரூர் நகரில் ஏராளமான மின் கம்பங்கள் சேதம் அடைந்துள்ளது. இந்த மின் கம்பங்களை சீரமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கஜா புயலின் தாக்கத்தினால் திருவாரூர்் மாவட்டத்தில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story