தமராக்கியில் வீடுகளை சேதப்படுத்திய வழக்கு 4 பெண்கள் உள்பட 11 பேர் கைது
தமராக்கியில் வீடுகளை சேதப்படுத்திய வழக்கில் 4 பெண்கள் உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை,
சிவகங்கையை அடுத்த தமறாக்கி தெற்கு கிராமத்தை சேர்ந்த திருமணமான ஒரு பெண்ணை 2 குழந்தைகளுடன், அதே கிராமத்தில் வசிக்கும் வேறு சமூகத்தை சேர்ந்த ஒரு வாலிபர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடத்தி சென்று விட்டார்.
இதனால் ஏற்பட்ட முன்விரோத்தில் மற்றொரு தரப்பினர், வாலிபர் வசிக்கும் பகுதியில் உள்ள 18 வீடுகளையும், வீட்டில் இருந்த பொருட்களையும் அடித்து சேதப்படுத்தினர்.
இது தொடர்பாக சிவகங்கை துணை போலீஸ் சூப்பிரண்டு அப்துல்கபூர், சிவகங்கை தாலுகா போலீசார் தமராக்கி மற்றும் குமாரபட்டி கிராமத்தை சேர்ந்த 61 பேர்கள் மீது வழக்கு பதிவு செய்து முருகானந்தம் (37), சிங்கராஜா (60), தங்கராஜ்(38), பஞ்சமுத்து (56), சேதுமுத்து (50), முனீஸ்வரன்(48), லிங்கம்(45), பழனியம்மாள் (50), பார்வதி (55), பஞ்சவர்ணம் (40), சுந்தரி (66) ஆகிய 11 பேர்களை கைது செய்தனர்
இந்த சம்பவத்தை தொடர்ந்து பாதிக்கப்பட்ட வீடுகளை சேர்ந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் நிதி உதவியை அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்.