வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு பங்குச்சந்தை தரகரை மிரட்டி பணம் பறித்தவர் கைது


வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு பங்குச்சந்தை தரகரை மிரட்டி பணம் பறித்தவர் கைது
x

வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு பங்குச்சந்தை தரகரை மிரட்டி பணம் பறித்தவர் கைது செய்யப்பட்டார். 23 ஆண்டுக்கு பிறகு சிக்கினார்.

மும்பை, 

மும்பை ஜூகுவை சேர்ந்தவர் சமீர் மானுபாய். இவர் பங்குச்சந்தை தரகராக இருந்து வந்தார். கடந்த 1995-ம் ஆண்டு ஜூகு கள்ளி பகுதியில் சென்று கொண்டிருந்த போது, 2 பேர் அவரை வழிமறித்தனர். பின்னர் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு மிரட்டிய அவர்கள், தரகரிடம் இருந்த பணத்தை பறித்து சென்றனர். 

இதுகுறித்த புகாரின் பேரில் ஜூகு போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்த சம்பவத்தில் தொடர்புடைய கோரேகாவை சேர்ந்த சந்தீப் பவார் என்பவரை கைது செய்தனர். இதுபற்றி அறிந்த அவரது கூட்டாளியான சத்தார் கப்பார் என்பவர் தலைமறைவானார். அவரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில், அவர் கோவண்டி பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் அங்கு சென்ற போலீசார், 23 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த சத்தார் கப்பாரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

Next Story