கஜா புயல் பாதிப்புகளை பார்வையிட மு.க.ஸ்டாலின் வருகை


கஜா புயல் பாதிப்புகளை பார்வையிட மு.க.ஸ்டாலின் வருகை
x
தினத்தந்தி 17 Nov 2018 12:10 AM GMT (Updated: 17 Nov 2018 12:10 AM GMT)

கஜா புயல் பாதிப்புகளை பார்வையிட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு புதுவைக்கு வந்தார்.

புதுச்சேரி,

‘கஜா’ புயலால் காரைக்கால், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. இப்பகுதியை சேர்ந்த பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து நேற்று இரவு புறப்பட்டார். அவர், நேற்று இரவு புதுச்சேரியில் உள்ள தனியார் ஓட்டலுக்கு வந்தார்.

அவரை முதல்–அமைச்சர் நாராயணசாமி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் புயல் பாதிப்புகள் குறித்து மு.க.ஸ்டாலினிடம் நாராயணசாமி கூறினார்.

இந்நிகழ்ச்சியின்போது புதுச்சேரி மாவட்ட தி.மு.க. அமைப்பாளர்கள் (தெற்கு) சிவா எம்.எல்.ஏ., (வடக்கு) எஸ்.பி.சிவக்குமார் ஆகியோர் தலைமையில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, மூர்த்தி, கோமலா, பொருளாளர்கள் சன்.குமாரவேல், செந்தில்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு அளித்தனர். அதைத்தொடர்ந்து அவர் புதுவை ஓட்டலில் தங்கி ஓய்வு எடுத்தார்.

அவர், இன்று (சனிக்கிழமை) காலை புதுவையில் இருந்து புறப்பட்டு கடலூர், நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளுக்கு சென்று புயல் பாதிப்புகளை பார்வையிடுகிறார்.


Next Story