சம்பா நெற்பயிருக்கு 30-ந் தேதி வரை காப்பீடு செய்ய வேண்டாம் கலெக்டர் சாந்தா தகவல்

பெரம்பலூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் 2018-19-ம் ஆண்டிற்கான சம்பா நெற்பயிருக்கு விவசாயிகள் காப்பீடு செய்துள்ளார்கள்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பெரம்பலூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் 2018-19-ம் ஆண்டிற்கான சம்பா நெற்பயிருக்கு விவசாயிகள் காப்பீடு செய்துள்ளார்கள். வட கிழக்கு பருவமழை பெய்யாததால், சாகுபடி பரப்பு மிகவும் குறைவாக உள்ளது. மேலும், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத்திட்டம்- வழிகாட்டு நெறிமுறையின்படி இழப்பீடு வழங்குவதற்கு முதல் நிலையான, விதைப்பு மற்றும் நடவு பொய்த்தல் குறித்து கடந்த 15-ந் தேதி அன்று மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்ட அறிக்கை சென்னை வேளாண்மைத்துறை இயக்குனர் அலுவலகம் மற்றும் சென்னை வேளாண் காப்பீட்டு நிறுவன அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. எனவே வருகிற 30-ந்தேதி வரை விவசாயிகள் சம்பா நெற்பயிருக்கு பயிர் காப்பீடு செய்ய வேண்டாம். மேலும் இதுகுறித்து விவசாயிகள் தங்கள் பகுதி வேளாண்மை உதவி இயக்குனர்களை அணுகி விவரம் பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story