திருவள்ளூர் மாவட்டத்தில் ஏரி, குளங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்
திருவள்ளூர் மாவட்டத்தில் ஏரி, குளங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று குறைதீர் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
திருவள்ளூர்,
நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் தெளிப்பு நீர் பாசன கருவிகள் இதுவரை 3 ஆயிரத்து 177 விவசாயிகளுக்கு ரூ.7 லட்சத்து 63 ஆயிரத்து 98 ஆயிரம் அரசு மானியத்தில் வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட நீர்வடி மேம்பாட்டு முகமையின் கீழ் 2018-19-ம் ஆண்டு முதல் நுண்ணீர் பாசன திட்டத்துடன் இணைந்து, துணை நிலை நீர் மேலாண்மை பணிகள் செயல்படுத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நுண்ணீர் பாசனங்களுக்கு மாறும் விவசாயிகள் ஒரு துளி நீரில் அதிக பயிர் என்ற மத்திய மாநில அரசு செயல்படுத்தும் திட்டத்தில் இணைந்து நுண்ணீர் பாசன மானியம் தவிர கிணறு அல்லது ஆழ்துளை கிணறு அமைத்தல், நீர் இறைக்க மின்மோட்டார், பாசன வசதி, நீரை வயலுக்கு அருகில் கொண்டு செல்ல குழாய்கள் நிறுவுதல், தரைநிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைத்தல் உள்ளிட்டவற்றுக்காக கூடுதல் மானியம் பெற்று பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்திற்கு வந்த திரளான விவசாயிகள் திருவள்ளூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்து காப்பீட்டு தொகை பெறாத விடுபட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர் ஆதாரங்களான ஏரி, குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் நீர்வரத்து கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மேய்க்கால் புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். தடுப்பணைகள் கட்டவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டரிடம் மனு அளித்தனர். மேலும் அந்த கோரிக்கை மனுவில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும், 3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள கரும்பு நிலுவை தொகையை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும், அங்கீகாரமற்ற வண்ணமீன் மற்றும் இறால் மீன் பண்ணைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், விவசாயிகள் அளிக்கும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளையும் வலியுறுத்தி இருந்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி, மாவட்ட வருவாய் அலுவலர் சந்திரன், சப்-கலெக்டர் ரத்னா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வேல்குமார், வேளாண் விற்பனை துணை இயக்குனர் திலகவதி, வேளாண்மை துணை இயக்குனர் சுரேஷ் மற்றும் வேளாண்துறையை சேர்ந்த திரளான அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story