தம்மம்பட்டியில் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பேரூராட்சி ஊழியர் விபத்தில் பலி


தம்மம்பட்டியில் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பேரூராட்சி ஊழியர் விபத்தில் பலி
x
தினத்தந்தி 19 Nov 2018 3:30 AM IST (Updated: 19 Nov 2018 1:48 AM IST)
t-max-icont-min-icon

தம்மம்பட்டியில் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பேரூராட்சி ஊழியர் பாலசுப்பிரமணியன் (வயது 34) விபத்தில் பலியார்.

தம்மம்பட்டி, 

தம்மம்பட்டி காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 34). இவர் தம்மம்பட்டி பேரூராட்சியில் மின்மோட்டார் இயக்கும் ஊழியராக பணியாற்றினார். பாலசுப்பிரமணியன் மீது தம்மம்பட்டி போலீஸ் நிலையத்தில் வழக்கு உள்ளதால் பேரூராட்சி நிர்வாகம் கடந்த மாதம் 22-ந் தேதி அவரை பணி இடைநீக்கம் செய்தது.

நேற்று முன்தினம் இரவு பாலசுப்பிரமணியன் தன்னுடன் பணியாற்றி வந்த நண்பருடன் வெளியே சென்றார். பின்னர் நண்பர் வீட்டுக்கு சென்று அவரை இறக்கி விட்ட பின்னர் தன்னுடைய மோட்டார்சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். குரும்பர் தெருவில் இருந்து பஸ்நிலையம் செல்லும் சாலையில் திரும்பியபோது அந்த வழியாக சென்ற லாரியின் பின்புறம் எதிர்பாராதவிதமாக மோதியதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் பாலசுப்பிரமணியனை மீட்டு சேலம் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நேற்று மாலை ஈரோட்டிற்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் இறந்தார். இந்த விபத்து குறித்து தம்மம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

Next Story