மாவட்ட செய்திகள்

பட்டதாரிகளுக்கு அதிகாரி பணி + "||" + Officers work for graduates

பட்டதாரிகளுக்கு அதிகாரி பணி

பட்டதாரிகளுக்கு அதிகாரி பணி
பால்மெர் லாவ்ரி கோ லிமிடெட் நிறுவனம் ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிபொருள் நிறுவனமாகும்.
 தற்போது இந்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் இந்த நிறுவனம் கொல்கத்தாவில் செயல்பட்டு வருகிறது.

மினிரத்னா அந்தஸ்து பெற்ற இந்த நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் மேலாளர் தரத்திலான அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலாளர் ஆபரேஷன்ஸ், டெபுடி மேனேஜர், அசிஸ்டன்ட் மேனேஜர் போன்ற பணிகளுக்கு மொத்தம் 106 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஒவ்வொரு பணிக்கும் உள்ள காலியிட விவரத்தை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம்.


ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. அதிகபட்சம் 50 வயதுடையவர்களுக்கும் பணிகள் உள்ளன. அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வும் பின்பற்றப்படுகிறது.

எம்.பி.ஏ., மேனேஜ்மென்ட் முதுநிலை படிப்புகள், லாஜிஸ்டிக்ஸ், ஆபரேசன்ஸ் முதுநிலை டிப்ளமோ படிப்புகள், சட்டப் படிப்புகள், கணினி அறிவியல், இன்பர்மேசன் டெக்னாலஜி பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு பணிகள் உள்ளன. குறிப்பிட்ட பணி அனுபவம் தகுதியாக கேட்கப்பட்டு உள்ளது.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இது பற்றிய விரிவான விவரங்களை www.balmerlawrie.com என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 22-11-2018-ந் தேதியாகும்.