காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் மோட்டார்சைக்கிள்கள், மாட்டு வண்டியில் மணல் கடத்தல் 4 பேர் கைது


காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் மோட்டார்சைக்கிள்கள், மாட்டு வண்டியில் மணல் கடத்தல் 4 பேர் கைது
x
தினத்தந்தி 20 Nov 2018 3:45 AM IST (Updated: 20 Nov 2018 12:27 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் மோட்டார்சைக்கிள்கள், மாட்டு வண்டியில் மணல் கடத்தலில் ஈடுபட்டதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய 2 பேரை தேடி வருகின்றனர்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் அருகே உள்ள சாலபோகம் வேகவதி ஆற்றுப்பகுதிகளில் சிலர் மோட்டார்சைக்கிள்களில் மணல் கடத்தி வருவதாக காஞ்சீபுரம் தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் போலீசாருடன் அங்கு விரைந்து சென்றார்.

அங்கு மோட்டார்சைக்கிள்களில் மணல் கடத்தி வந்த சாலபோகத்தை சேர்ந்த தட்சிணாமூர்த்தி(வயது 35), சிவகுமார்(45), சந்திரன்(63) ஆகிய 3 பேரை கைது செய்த போலீசார், கடத்தல் மணலுடன் 3 மோட்டார்சைக்கிள்களையும் கைபற்றினர்.

இதேபோல் காஞ்சீபுரம் செவிலிமேடு பாலாற்று பகுதியில் மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்ததாக செவிலிமேடு கிராமத்தை சேர்ந்த செல்வம்(47) என்பவரை காஞ்சீபுரம் தாலுகா போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மாட்டு வண்டி பறிமுதல் செய்யப்பட்டது.

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர், அதிகத்தூர், புதுமாவிலங்கை, எம்.ஜி.ஆர். நகர் போன்ற பகுதிகளில் கடம்பத்தூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் மணல் கடத்தி வந்த 2 பேர், போலீசாரை கண்டதும் மோட்டார்சைக்கிள்களை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

கடத்தல் மணலுடன் 2 மோட்டார்சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுபற்றி கடம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 2 பேரையும் தேடி வருகின்றனர்.

Next Story