மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
அரசு மருத்துவமனையில் கூடுதல் டாக்டர்களை பணியில் அமர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அரியலூர்,
கொள்ளிடம் ஆற்றில் மாட்டு வண்டி மூலம் மணல் எடுக்க அனுமதிக்க வேண்டும். அரியலூர் அரசு மருத்துவமனையில் கூடுதல் டாக்டர்களை பணியில் அமர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாட்டு வண்டி தொழிலாளர்கள் அரியலூர் அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அரியலூர் மாவட்ட தலைவர் உலகநாதன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஊர்வலமாக சென்று கலெக்டர் விஜயலட்சுமியிடம் கோரிக்கைகள் தொடர்பான மனுவினை அளித்தனர்.

Related Tags :
Next Story