பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் அரசு மருத்துவமனை துப்புரவு பணியாளர்கள் போராட்டம்
கரூர் அரசு மருத்துவமனையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டடனர்.
கரூர்,
கரூர் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளர்கள் ஏராளமானவர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்தநிலையில் தங்களுக்கு கூடுதலாக பணிசுமை கொடுக்கப்படுவதாகவும், துப்புரவு பணிகளை மேற்கொள்வதோடு மட்டும் அல்லாமல் மருத்துவமனை நர்சுகளுக்கு சிலர் ஊசி எடுத்து கொடுப்பது, நோயாளிகளுக்கு கட்டு போடுவது என்கிற வகையில் எங்களை வேலை வாங்குகின்றனர். எனவே இது குறித்து உரிய விசாரணை நடத்தி எங்களுக்கு பணியை வரன்முறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி நேற்று காலை ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் ஒரு மணி நேரம் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இது குறித்து தகவல் அறிந்ததும் மருத்துவமனை அதிகாரி மணிவாசகம் உள்ளிட்டோர் நேரில் வந்து அந்த பணியாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், உங்களது குற்ற சாட்டுகள் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி உறுதியளித்தார். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்கள் மீண்டும் பணிக்கு திரும்பினர். இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story