கரூர் அருகே புதிய வழித்தடங்களில் பஸ் இயக்கம் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்
கரூர் மாவட்டம் புன்னம்சத்திரம் அருகே பழமாபுரம் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்லும் பொதுமக்கள் உள்ளிட்டோரின் வசதிக்காக அங்கிருந்து புதிய வழித்தடங்களில் பஸ் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
நொய்யல்,
கரூர் மாவட்டம் புன்னம்சத்திரம் அருகே பழமாபுரம் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்லும் பொதுமக்கள் உள்ளிட்டோரின் வசதிக்காக அங்கிருந்து புதிய வழித்தடங்களில் பஸ் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன் பேரில் புதிய வழித்தடங்களில் பஸ் இயக்கப்படுவதற்கான நிகழ்ச்சி பழமாபுரத்தில் நடந்தது. இதில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு, கொடியசைத்து புதிய வழித்தடங்களில் பஸ்சை தொடங்கி வைத்தார். கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை வகித்தார். புன்னம் கூட்டுறவு வங்கித்தலைவர் சுசீந்திரமூர்த்தி, பரமத்தி ஒன்றிய செயலாளர் மார்க்கண்டேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு போக்குவரத்து கழக பொதுமேலாளர் ராஜ்மோகன் வரவேற்றார். புதிய வழித் தடங்களில் பஸ் இயக்கப்படுவது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், பழமாபுரம் பகுதியில், கரூர்-பழமாபுரம் (வழி) மண்மங்கலம், வேலாயுதம்பாளையம், டி.என்.பி.எல், மூலிமங்கலம் வழித்தடம் மற்றும் பரமத்தி தெற்கு ஒன்றியம், எம்.ஜி.ஆர்.நகர், சின்னதாராபுரம் பகுதியில், பள்ளபட்டி-வேலூர் (வழி), அரவக்குறிச்சி, அரிக்கதாரன்வலசு, ஒத்தமாந்துறை, சின்னதாராபுரம், ஆரியூர், பரமத்தி வழித்தடம் மற்றும் அரவக்குறிச்சி ஒன்றியம், கே.வெங்கிடாபுரம் பகுதியில், பள்ளபட்டி-மார்க்கம்பட்டி (வழி) தலையாரிப்பட்டி, இனுங்கனூர், குமாரபாளையம், கே.வெங்கிடாபுரம், நவாமரத்துப்பட்டி வழித்தடம் ஆகிய 3 புதிய வழித்தடங்களில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் காலை மற்றும் மாலை நேரங்களில் பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது என்றார். இதில் கரூர் ஒன்றிய செயலாளர் கமலக்கண்ணன், காகித புரம் பேரூர் செயலாளர், வழக்கறிஞர் சதாசிவம் மற்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள், மண்டல பொதுமேலாளர் ஜுலியஸ் அற்புதராயன், உதவி மேலாளர் (தொழில்நுட்பம்) சேகர், உதவிமேலாளர் (இயக்கம்) சுவாமிநாதன், கிளைமேலாளர்கள் செந்தில்குமார், இராஜேந்திரன், மற்றும் அ.தி.மு.க. பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story