தென்காசி அருகே பன்றிக் காய்ச்சலுக்கு காவலாளி பலி மருத்துவ குழுவினர் முகாம்
தென்காசி அருகே பன்றிக் காய்ச்சலுக்கு காவலாளி பலியானார்.
தென்காசி,
நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள அகரக்கட்டு எஸ்.கே.டி. நகரை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (வயது 57). இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார்.
இவருக்கு கடந்த 12-ந் தேதி காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து நெல்லையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
பின்னர் கடந்த 18-ந் தேதி அவர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
அப்போது, அவருக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி இருந்தது தெரியவந்தது. ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் ஆரோக்கியசாமி இறந்தார்.
இதையடுத்து மருத்துவ அலுவலர் டாக்டர் தமிழ்ச்செல்வி, செங்கோட்டை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரகுபதி, சுகாதார பணிகள் துறை இயக்குனரின் நேர்முக உதவியாளர் சீனிவாசன் மற்றும் பணியாளர்கள் கொண்ட மருத்துவக் குழுவினர் நேற்று அகரக்கட்டில் மருத்துவ முகாமிட்ட னர். இந்த முகாம் அகரக்கட்டு பஸ் நிறுத்தம் மற்றும் அங்குள்ள கிறிஸ்தவ ஆலயம் ஆகியவற்றில் நடைபெற்றது.
இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். ஆய்க்குடி நகர பஞ்சாயத்து மற்றும் மருத்துவ குழுவினர் சார்பில் துப்புரவு பணியும் நடைபெற்றது.
Related Tags :
Next Story