அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வீடு மீது கல் வீச்சு போலீஸ் குவிப்பு


அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வீடு மீது கல் வீச்சு போலீஸ் குவிப்பு
x
தினத்தந்தி 20 Nov 2018 4:15 AM IST (Updated: 20 Nov 2018 2:45 AM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யம் அருகே அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வீடு மீது கல் வீசப்பட்டது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கஜா புயலினால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இங்கு மரங்கள், வீடுகள், மின்கம்பங்கள், மின்மாற்றிகள், படகுகள் சேதமாகி உள்ளன. இதனால் தண்ணீர், மின்சாரம் உள்பட அடிப்படை வசதிகள் எதுவும் கிடைக்காமல் அப்பகுதி மக்கள் பெறும் துயரில் உள்ளனர். இந்த நிலையில் தண்ணீர் உள்பட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர வலியுறுத்தி ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் வேதாரண்யம்-திருத்துறைப்பூண்டி சாலையில் ராஜாளிக்காடு பகுதி உள்ளது. இந்த பகுதியில் அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் வீடு உள்ளது. நேற்று முன்தினம் இந்த வீட்டின் மீது மர்ம நபர்கள் சிலர் கல்வீசி தாக்கினர். இதனால் அந்த வீட்டில் இருந்த கண்ணாடி உடைந்தது. மேலும் அங்கு இருந்த அ.தி.மு.க. கொடியும் சேதமானது. இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

Next Story