கல்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 2 பேர் பலி
கல்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள்.
கல்பாக்கம்,
கல்பாக்கத்தை அடுத்த தச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜாமணி (வயது 35). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் தச்சூர் கிராமத்தில் இருந்து நீலமங்கலம் வழியாக பேய்கரணை கிராமத்துக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது.
அதில் பேய்கரணை கிராமத்தை சேர்ந்த கேசவன் (57) மற்றும் விஸ்வா (13) ஆகியோர் வந்தனர். பேய்கரணை அரிசி ஆலை அருகே வந்த போது 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேராக மோதிக்கொண்டன.
இதில் ராஜாமணி, கேசவன், விஸ்வா படுகாயம் அடைந்தனர். தகவலறிந்த அணைக்கட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலிங்கம் மற்றும் போலீசார் விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜாமணி பரிதாபமாக உயிரிழந்தார்.
கேசவன் மற்றும் விஸ்வா மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி கேசவன் பரிதாபமாக உயிரிழந்தார். விஸ்வா சிகிச்சை பெற்று வருகிறார்.

Related Tags :
Next Story