65-வது கூட்டுறவு வார விழா 2,148 பேருக்கு கடனுதவி கலெக்டர் வழங்கினார்


65-வது கூட்டுறவு வார விழா 2,148 பேருக்கு கடனுதவி கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 21 Nov 2018 4:00 AM IST (Updated: 20 Nov 2018 10:19 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 65-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா கடந்த 14-ந்தேதி தொடங்கியது.

காஞ்சீபுரம்,

இதையொட்டி, காஞ்சீபுரம் அறிஞர் அண்ணா அரங்கத்தில் நடந்த விழாவில் காஞ்சீபுரம் மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளர் ஆர்.கே.சந்திரசேகரன் திட்ட விளக்கவுரையாற்றினார். நிகழ்ச்சியில், காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா கலந்து கொண்டு, பயிர்க்கடன், வீட்டு வசதி கடன், மத்தியகால கடன், உழைக்கும் மகளிர்கடன், தொழில் முனைவோர்கடன், சிறுவணிககடன், பண்ணைசாரா கடன், தாட்கோ கடன், மாற்றுத்திறனாளி கடன் உள்ளிட்ட ரூ.18 கோடியே 26 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை 2,148 பயனாளிகளுக்கு கலெக்டர் வழங்கினார். மேலும் சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயமும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வாலாஜாபாத் கணேசன், காஞ்சீபுரம் மத்திய மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம், அ.தி.மு.க. அமைப்பு செயலாளர்கள் வி.சோமசுந்தரம், மைதிலிதிருநாவுக்கரசு, காஞ்சீபுரம் எம்.பி. கே.மரகதம்குமரவேல், காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. எழிலரசன், காஞ்சீபுரம் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகி முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடக்கத்தில் காஞ்சீபுரம் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் ஜெயஸ்ரீ வரவேற்றார். முடிவில் காஞ்சீபுரம் சரக துணை பதிவளர் ஆர்.வேணு நன்றி கூறினார்.

Next Story