புதுக்கோட்டையில் டெங்கு விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வினியோகம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்


புதுக்கோட்டையில் டெங்கு விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வினியோகம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 20 Nov 2018 10:30 PM GMT (Updated: 20 Nov 2018 6:33 PM GMT)

புதுக்கோட்டையில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகத்தை கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி, 

புதுக்கோட்டையில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகத்தை கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்.

விழிப்புணர்வு

தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டையில் மருந்து வணிகர் சங்கம் சார்பில் டெங்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம் மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி, விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் வழங்கினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீரை வழங்கி பணியை தொடங்கி வைத்து பேசினார்.

ஒத்துழைப்பு

அப்போது, மாவட்ட மருந்து வணிகர் சங்கம் ஆண்டுதோறும் டெங்கு விழிப்புணர்வு பணிகள் மற்றும் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் பணிகளை செய்து வருகிறது. இந்த ஆண்டும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து கோவில்பட்டி, திருச்செந்தூர் மற்றும் மாவட்டத்தில் பல்வேறு ஊர்களிலும் இந்த பணிகளை மேற்கொள்ள உள்ளனர். ஆகையால் பொதுமக்கள் கொசு ஒழிப்பு மற்றும் சுகாதார பணிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கூறினார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட மருந்து வணிகர் சங்க செயலாளர் முனியசாமி, தலைவர் ஜான் பிரிட்டோ, மாவட்ட மொத்த வணிகப்பிரிவு தலைவர் ஜூடு ராஜேஷ்கண்ணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story