கார்த்திகை தீப திருவிழா: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள்
கார்த்திகை தீப திருவிழாவையொட்டி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
நெல்லை,
கார்த்திகை தீப திருவிழாவையொட்டி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
இதுகுறித்து அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கார்த்திகை தீப திருவிழா
வருகிற 23-ந் தேதியன்று திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா நடக்கிறது. இந்த விழாவுக்காக நெல்லை, வள்ளியூர், திசையன்விளை, பாபநாசம், தென்காசி, சங்கரன்கோவில், புளியங்குடி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர் ஆகிய ஊர்களில் இருந்து திருவண்ணாமலைக்கு தேவையான சிறப்பு பஸ்களை இயக்க அரசு போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்துள்ளது. பஸ்கள் நாளை (வியாழக்கிழமை) மாலை புறப்பட்டு மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை திருவண்ணாமலை சென்றடையும்.
தீபம் ஏற்றிய பின்னர் 23-ந் தேதி இரவு திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு வரும்படியாக இயக்கப்பட உள்ளது. எனவே பொதுமக்கள் இந்த சிறப்பு பஸ்களை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story