மயக்க மருந்தின்றி குழந்தைகளுக்கு இதய நோய் சிகிச்சை


மயக்க மருந்தின்றி குழந்தைகளுக்கு இதய நோய் சிகிச்சை
x
தினத்தந்தி 20 Nov 2018 10:30 PM GMT (Updated: 20 Nov 2018 8:07 PM GMT)

மயக்க மருந்தின்றி குழந்தைகளுக்கு இதய நோய் சிகிச்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் சாதனை.

பெரம்பலூர்,

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இதய நோய் பிரிவின் மூலம் பல்வேறு வகையான இதய நோய்களுக்கு சுமார் 32 ஆயிரம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த மருத்துவமனையில் தமிழக முதல்- அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டம் மற்றும் பல்வேறு காப்பீடு திட்டங்கள் மூலம் இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அனுபவம் வாய்ந்த இதய நோய் நிபுணர் டாக்டர் கணேஷ் தலைமையிலான டாக்டர்கள் கோபிநாத், ஆஷிக் ஆகியோர் பிறந்து சில மாதங்களே ஆன அரியலூர் மாவட்டம் வரதராஜன் பேட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டை சேர்ந்த 2 குழந்தைகளுக்கு நுண் வலை சாதனம் மூலம் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சிகிச்சைக்கு பொதுவாக மயக்க மருந்து மற்றும் செயற்கை சுவாசம் தேவை. ஆனால் மயக்க மருந்து, செயற்கை சுவாசம் ஏதுவும் இன்றி, அறுவை சிகிச்சையின்றி மிதமான தூக்க மருந்தின் உதவியோடு, குழந்தைகளுக்கு இதய நோய்க்கு நுண் வலை சாதனம் மூலம் டாக்டர் கள் சிகிச்சையை செய்து சாதனை புரிந்துள்ளனர். இந்த கடினமான, நுணுக்கமான சிகிச்சை முறை சென்னை மற்றும் மதுரை ஆகிய மாநகரங்களில் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. தற்போது இந்த சிகிச்சை பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையிலும் மேற்கொள்ளப் படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது, தனலட்சுமி சீனிவாசன் கல்விக்குழுமத்தின் செயலாளர் நீல்ராஜ், தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் டீன் ரெங்கநாதன், கண்காணிப் பாளர் நீலகண்டன், இருக்கை மருத்துவ அதிகாரி பானுமதி ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story