வானவில் : விரைவில் வருகிறது ஹீரோ எக்ஸ்பல்ஸ்


வானவில் : விரைவில் வருகிறது ஹீரோ எக்ஸ்பல்ஸ்
x
தினத்தந்தி 21 Nov 2018 7:23 AM GMT (Updated: 2018-11-21T12:53:20+05:30)

சில ஆண்டுகளுக்கு முன்பு ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ‘இம்பல்ஸ்’ என்ற பெயரில் மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தியது. ஆனால் அந்த மாடல் சரிவர விற்பனையாகாததால் உற்பத்தியை நிறுத்தியது.

துரதிருஷ்டவசமாக சாகச மோட்டார் சைக்கிள்கள் சந்தைக்கு வரும் முன்பாகவே இம்பல்ஸ் வந்துவிட்டது. ஆனால் இப்போதோ நிலைமை மாறிவிட்டது. இதைக் கருத்தில் கொண்டு புதிய ரக மோட்டார் சைக்கிளை இந்நிறுவனம் ‘எக்ஸ்பல்ஸ்’ என்ற பெயரில் அறிமுகம் செய்ய உள்ளது. கடந்த ஆண்டு மிலானில் நடைபெற்ற ஆட்டோமொபைல் கண்காட்சியில் இந்த மோட் டார் சைக்கிள் காட்சிப்படுத்தப்பட்ட போது இது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இதைக் கருத்தில் கொண்டே இப்போது எக்ஸ்பல்ஸ் தயாரிப்பில் தீவிரம் காட்டி வருகிறது ஹீரோ.

இது தவிர பாலைவனம், சமதளம், ஸ்கிராம்பிளர் என மூன்று விதமான நிலப்பகுதிகளிலும் பயணிக்கும் வகையிலான புதிய மோட்டார் சைக்கிளை உருவாக்குவதிலும் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

கபே ரேஸர் மாடல் மிகச் சிறந்த வடிவமைப்போடு கம்பீரமான தோற்றத்தோடு காட்சியளித்து பலரையும் கவர்ந்தது. கிளிப் ஆன் ஹாண்டில் பார், ஒற்றை இருக்கை, ஸ்போர்டி டயர், சக்கரம் ஆகியன இந்த மோட்டார் சைக்கிளை வாங்க தூண்டுவதாக இருந்தது. அதிலும் தங்க நிறத்திலான போர்க், லீவர் புரொடெக்டர் ஆகியன பந்தய வாகனத்தின் புதிய பரிமாணமாக மிளிர்ந்தது. 

Next Story