வானவில் : சுகாதாரம் அளிக்கும் சூப்பர் கருவி


வானவில் : சுகாதாரம் அளிக்கும் சூப்பர் கருவி
x
தினத்தந்தி 21 Nov 2018 1:26 PM IST (Updated: 21 Nov 2018 1:26 PM IST)
t-max-icont-min-icon

இந்தியா மட்டுமல்ல உலகின் பல நாடுகளிலும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. குடிப்பதற்கே தண்ணீர் இல்லாத போது துணி துவைப்பது, சுகாதாரம் பேணுவது என்பது மிகவும் கடினமாக உள்ளது.

அசுத்தமான தண்ணீரினால் பல நோய்கள் பரவுவதோடு புது வியாதிகளும் உருவாகும். இந்த மிகப்பெரிய பிரச்சினைக்கு ஒரு மிகச்சிறிய கருவியை தீர்வாக கண்டுபிடித்துள்ளது ஒரு தொழில்நுட்ப நிறுவனம். 

பாக்கெட்டில் வைத்துக் கொள்ளக்கூடிய அளவு சிறிய கருவியான இந்த சோனிக் சோக்( sonic soak ) நமது துணி, பொருட்கள், பழங்கள், காய்கள், நகை, குழந்தைகளின் பாட்டில்கள் என்று சகலத்தையும் சுத்தம் செய்யும். மீயொலி ( ultrasonic ) கதிர்கள் மூலம் நுரை உருவாக்கப்பட்டு இது எத்தகைய அழுக்கையும் குறைவான தண்ணீரிலேயே நீக்கி விடும். 

ஒரு மணி நேரத்திற்குள் வாஷிங் மெஷின் உபயோகிக்கும் தண்ணீரை விட இரண்டு மடங்கு குறைவான நீரிலேயே துணிகளை பளிச்சிட வைக்கும். கேடு விளைவிக்கும் சக்தி வாய்ந்த பாக்டீரியாவை கூட கொன்றுவிடும். இதனை உபயோகிப்பதும் வெகு சுலபம். 

ஒரு தொட்டியில் அல்லது பாத்திரத்தில் சிறிது நீர் நிரப்பி, சில துண்டுகள் சோப்பு சேர்த்து சுத்தம் செய்ய வேண்டிய பொருளை அதில் போட்டு வைத்து விட்டால் போதும். இத்துடன் இணைக்கப்பட்ட டைமர் நமக்கு வேலை முடிந்த உடன் அலாரம் அடித்து தெரிவித்துவிடும். அழுக்குத் தண்ணீரின் ஆபத்துகளை முறியடிக்கும் சோனிக் சோக் ஒரு மிகப் பெரிய வரப்பிரசாதம். இதன் விலை 100 அமெரிக்கன் டாலர்கள். 

Next Story