வானவில் : எல்.ஜி.யின் ஸ்மார்ட் ரெப்ரிஜிரேட்டர்
இது ஸ்மார்ட்டான உலகம். உங்களது வீட்டு உபயோக பொருட்களும் ஸ்மார்ட்டாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.
வீட்டில் வை-பை, ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டி.வி. என பயன்படுத்தும்போது, பிரிட்ஜ் மட்டும் பழைய காலத்து ஐஸ் பெட்டியாக இருந்தால் நன்றாக இருக்குமா?.
இக்குறையைப் போக்கும் வகையில் மிகவும் நவீனமான ரெப்ரிஜிரேட்டரை எல்.ஜி. நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. வை-பையில் இயங்கும் வகையில் ஸ்மார்ட் ரெப்ரிஜிரேட்டர் 23 மாடல்களில் வந்துள்ளது. இதன் விலை ரூ.89 ஆயிரத்திலிருந்து ரூ. 6.5 லட்சம் வரை நீள்கிறது. விலைக்கேற்ப இதில் உள்ள வசதிகள் கூடிக் கொண்டே போகும்.
பிரிட்ஜின் அருகே நீங்கள் சென்ற உடனேயே கதவு திறக்கும் வகையில் சென்சார் உள்ளது. அதேபோல கதவை தட்டியவுடன் பிரிட்ஜ் கதவு திறக்கும். முன்பக்கம் கண்ணாடியைக் கொண்ட ஒரு பகுதியில் கதவை தட்டினால் லைட் எரியும். பிரிட்ஜில் உள்ள பொருட்களை எளிதாகப் பார்க்க முடியும்.
வீட்டில் பயன்படுத்தும் அலெக்ஸா, கூகுள் ஸ்மார்ட் உள்ளிட்ட ஸ்மார்ட் கருவிகளுடன் இணைத்து இதைப் பயன்படுத்த முடியும்.
Related Tags :
Next Story