குருபரப்பள்ளி அருகே பி.எஸ்.என்.எல். அதிகாரி வீட்டில் 12 பவுன் நகை திருட்டு


குருபரப்பள்ளி அருகே பி.எஸ்.என்.எல். அதிகாரி வீட்டில் 12 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 21 Nov 2018 10:45 PM GMT (Updated: 2018-11-21T23:11:14+05:30)

குருபரப்பள்ளி அருகே பி.எஸ்.என்.எல். அதிகாரி வீட்டில் 12 பவுன் நகைகள் திருட்டு போனது.

குருபரப்பள்ளி, 

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள குந்தப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 56). இவர் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

நேற்று முன்தினம் காலையில் அவர் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார். அவரது மனைவி அன்ன பூரணி வீட்டை பூட்டிவிட்டு தோட்டத்தை பார்க்க சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பினார்.

அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தார். அங்கே இரும்பு பீரோவில் இருந்த 12 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இது குறித்து கண்ணன் குருபரப்பள்ளி போலீசில் புகார் அளித்தார். புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இச்சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம் நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story