தேனி மாவட்டத்தில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு ‘தினத்தந்தி கல்விநிதி’ - கலெக்டர் பல்லவி பல்தேவ் நாளை வழங்குகிறார்


தேனி மாவட்டத்தில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு ‘தினத்தந்தி கல்விநிதி’ - கலெக்டர் பல்லவி பல்தேவ் நாளை வழங்குகிறார்
x
தினத்தந்தி 21 Nov 2018 10:45 PM GMT (Updated: 21 Nov 2018 5:49 PM GMT)

தேனி மாவட்டத்தில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகள் 10 பேருக்கு ‘தினத்தந்தி’ கல்விநிதி’ வழங்கும் விழா நாளை தேனி சில்வார்பட்டியில் நடக்கிறது. விழாவில் தேனி கலெக்டர் பல்லவி பல்தேவ் கல்வி நிதியை வழங்குகிறார்.

தேனி, நவ.22-


‘தினத்தந்தி’ நாளிதழ் கல்வி பணியில் பல்வேறு புரட்சிகளை செய்து வருகிறது. இதில் மாநில அளவில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகளில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கி ஊக்குவித்து வந்தது.
அதேபோல் மாணவர் பரிசு திட்டத்தின் மூலம் மாவட்டம் தோறும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகள் அனைவருக்கும் ரொக்கப்பரிசு மற்றும் ‘தினத்தந்தி’யின் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

மேலும் கடந்த 2014-2015-ம் கல்வி ஆண்டு முதல் ‘தினத்தந்தி’ கல்விநிதி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவ-மாணவிகளின் மேல்படிப்புக்கு ‘தினத்தந்தி’ நிதி உதவி அளித்து வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு மாவட்டத்துக்கு தலா 10 மாணவ-மாணவிகள் வீதம் 34 மாவட்டங்களை சேர்ந்த 340 மாணவ-மாணவிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.34 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி கடந்த 2017-2018-ம் கல்வி ஆண்டில் ‘தினத்தந்தி’ கல்விநிதி திட்டத்தின் கீழ் தலா ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசு பெற தகுதி பெற்றுள்ள தேனி மாவட்டத்தை சேர்ந்த எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் 10 பேரின் பெயர் விவரம் வருமாறு:-

1.சி.மேனகா, எஸ்.ஆர்.ஜி. அரசு உயர்நிலைப்பள்ளி, ஸ்ரீரெங்கபுரம், தேனி. 2.சோ.கபிலா, அரசு மேல்நிலைப்பள்ளி, சில்வார்பட்டி, 3.சு.அஜந்தாமீனா, அரசு மேல்நிலைப்பள்ளி, ஜெயமங்கலம். 4.மூ.அபிநயா, அரசு மேல்நிலைப்பள்ளி, கண்டமனூர். 5.க.ஜெய்சூர்யா, எஸ்.ஆர்.ஜி. அரசு உயர்நிலைப்பள்ளி, ஸ்ரீரெங்கபுரம், தேனி. 6.சி.சவுந்தர்யா, புனித ஆக்னஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வடமலைராஜபுரம். 7.மு.மோகன பிரியா, க.வே.அ.பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சின்னமனூர். 8.செ.பிரதீப்பாண்டி, நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தேனி. 9.நா.சுப்பிரமணி, நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி, தேனி. 10.செ.முத்துமாரி, இந்து மேல்நிலைப்பள்ளி, சக்கம்பட்டி, ஆண்டிப்பட்டி.

இந்த 10 மாணவ-மாணவிகளுக்கும் ‘தினத்தந்தி’ கல்விநிதி வழங்கும் விழா, தேனி சில்வார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 3.30 மணிக்கு நடைபெறுகிறது.
விழாவில் தேனி மாவட்ட கலெக்டர் ம.பல்லவி பல்தேவ் தலைமை தாங்கி, மாணவ- மாணவிகளுக்கு ‘தினத்தந்தி’ கல்விநிதியை வழங்கி பேசுகிறார். மேலும் முதன்மை கல்வி அலுவலர் அ.மாரிமுத்து வாழ்த்தி பேசுகிறார்.

விழாவின் தொடக்கமாக ‘தினத்தந்தி’ திண்டுக்கல் மேலாளர் எஸ்.லட்சுமணன் வரவேற்புரை ஆற்றுகிறார். இறுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அ.மோகன் நன்றி கூறுகிறார்.

Next Story