மாவட்ட செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் தரையில் பதிக்கப்பட்ட கற்கள் உடைந்து திடீர் பள்ளம், பெண் பயணி காயம் + "||" + The sudden collapse of stones embedded in the ground at the airport in Chennai groove, Traveler injury

சென்னை விமான நிலையத்தில் தரையில் பதிக்கப்பட்ட கற்கள் உடைந்து திடீர் பள்ளம், பெண் பயணி காயம்

சென்னை விமான நிலையத்தில் தரையில் பதிக்கப்பட்ட கற்கள் உடைந்து திடீர் பள்ளம், பெண் பயணி காயம்
சென்னை விமான நிலையத்தில் தரையில் பதிக்கப்பட்ட கற்கள் உடைந்து பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பள்ளத்தில் விழுந்து ஒரு பெண் பயணி காயம் அடைந்தார்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கட்டப்பட்ட புதிய முனையங்களில் இதுவரை 15 முறை மேற்கூரைகளும், 25 முறை தானியங்கி கண்ணாடி கதவுகளும், 34 முறை தடுப்பு சுவர் போல் பதிக்கப்பட்ட கண்ணாடிகளும், 6 முறை சுவரில் பதிக்கப்பட்ட கிரானைட் கற்களும், தலா ஒரு முறை விளக்கு கண்ணாடி, அறிவிப்பு பலகை டி.வி. கண்ணாடி உடைந்து உள்ளன. இந்த சம்பவங்களில் 13 பேர் காயமடைந்தனர்.

இந்நிலையில் உள்நாட்டு வருகை பகுதியில் 3–வது, 4–வது நுழைவு வாயில் நடுவே தரையில் பதிக்கப்பட்டு இருந்த கற்கள் உடைந்து பள்ளம் ஏற்பட்டது.

அந்த சமயம் மராட்டிய மாநிலம் புனே நகரில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த ஒரு ஒரு பெண் தன் கணவருடன் டிராலியை தள்ளிக்கொண்டு நடந்து சென்றார். திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் அந்த பெண் விழுந்து காயம் அடைந்தார்.

இது பற்றி தகவல் அறிந்த விமான நிலைய அதிகாரிகள் அங்கு வந்து பள்ளம் ஏற்பட்ட பகுதியில் யாரும் செல்லாத வகையில் தடுப்புகளை வைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


தொடர்புடைய செய்திகள்

1. ஹாங்காங் விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் இயக்கம்
போராட்டம் தணிந்ததால், ஹாங்காங் விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் இயக்கப்படுகின்றன.
2. விமான நிலையத்தில் திரண்ட ஹாங்காங் போராட்டக்காரர்கள் - 3 நாட்கள் தங்கியிருந்து போராட முடிவு
சர்வதேச கவனத்தை ஈர்ப்பதற்காக ஹாங்காங் போராட்டக்காரர்கள் விமான நிலையத்தில் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் அங்கு 3 நாட்கள் தங்கியிருந்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
3. காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து, கோவை விமான நிலையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு
காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட் டதை தொடர்ந்து கோவை விமான நிலையத்திலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
4. 6 விமான நிலையங்கள் தனியார் மயமாகின்றன - மத்திய அரசு தகவல்
மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சவுகதா ராய், விமான நிலையங்களை தனியார் மயமாக்கும் திட்டம் உள்ளதா? கொல்கத்தா விமான நிலையம் தனியாரிடம் ஒப்படைக்கப்படுமா? போன்ற கேள்விகளை எழுப்பினார்.
5. முக்கிய பகுதிகளை சரியாக பராமரிக்கவில்லை: சென்னை விமான நிலைய இயக்குனருக்கு டைரக்டர் ஜெனரல் நோட்டீஸ்
பயணிகள் விமான போக்குவரத்து டைரக்டர் ஜெனரல் அலுவலக அதிகாரிகள் சென்னை உள்பட நாட்டில் உள்ள பல்வேறு விமான நிலையங்களை ஆய்வு செய்தனர்.