கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்


கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்
x
தினத்தந்தி 22 Nov 2018 4:00 AM IST (Updated: 22 Nov 2018 12:34 AM IST)
t-max-icont-min-icon

கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் பராமரிப்பு காரணங்களுக்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

கல்பாக்கம்,

கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் 2 யூனிட்டுகளில் தலா 200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த மின்சாரம் தமிழ்நாடு மற்றும் இதர மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 30–ந் தேதி முதல் பராமரிப்பு காரணங்களுக்காக முதல் அலகு மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

2–வது அலகில் மட்டும் 200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் இந்த அணு உலை மின் உற்பத்தியும் நிறுத்தப்பட்டுள்ளது.

அணுசக்தி துறை ஒழுங்கு முறை வாரியத்தின் ஆலோசனையின் பேரில் இந்த மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Next Story