காஞ்சீபுரம் மாவட்டத்தில் மாநில தேர்தல் பார்வையாளர் ஆய்வு


காஞ்சீபுரம் மாவட்டத்தில் மாநில தேர்தல் பார்வையாளர் ஆய்வு
x
தினத்தந்தி 21 Nov 2018 10:30 PM GMT (Updated: 2018-11-22T00:34:12+05:30)

காஞ்சீபுரத்தில் மாநில தேர்தல் பார்வையாளர் அனில் மேஷ்ராம் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடத்தப்பட்டது.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 2019–ம் ஆண்டுக்கான சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடர்பாக கடந்த செப்டம்பர் மாதம் 1–ந் தேதி முதல் அக்டோபர் மாதம் 31–ந்தேதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில், வாக்காளர்கள் தங்களது பெயர்களை சேர்த்தல், நீக்கம் செய்தல், திருத்தல், முகவரி மாற்றம் தொடர்பான படிவங்ககளை நிரப்பி அளித்தனர். அந்த படிவங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக மாநில தேர்தல் பார்வையாளர் அனில் மேஷ்ராம் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு கூட்டம் காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடத்தப்பட்டது.

இதை தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் கட்டுப்பாட்டு அறை, உதவி வாக்காளர் பதிவு அலுவலகம், காஞ்சீபுரம், வாலாஜாபாத் தாசில்தார் அலுவலகங்கள் போன்றவற்றில் ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வின்போது காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா, சார்–ஆட்சியர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story