கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அ.தி.மு.க.-தி.மு.க.வினர் நிவாரண பொருட்கள் அனுப்பினர்


கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அ.தி.மு.க.-தி.மு.க.வினர் நிவாரண பொருட்கள் அனுப்பினர்
x
தினத்தந்தி 22 Nov 2018 4:15 AM IST (Updated: 22 Nov 2018 1:34 AM IST)
t-max-icont-min-icon

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

அரியலூர்,

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர் மாவட்ட பொதுமக்களுக்கு அரியலூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அரிசி மூட்டைகள், குடிநீர் பாட்டில்கள், துணிகள், பிஸ்கெட் பாக்கெட்டுகள், உணவு பொருட்கள் உள்ளிட்ட மொத்தம் ரூ.15 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் நேற்று 5 லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.

முன்னதாக நிவாரண பொருட்களை கொண்டு செல்லும் லாரிகளை தமிழக அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். இதில் ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ., அ.தி.மு.க. அரியலூர் மாவட்ட துணை செயலாளர் தங்க பிச்சமுத்து, பொருளாளர் அன்பழகன், மாணவர் அணி தலைவர் சங்கர், பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதே போல் அரியலூர் சிமெண்டு சிட்டி லயன்ஸ் சங்கம் சார்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை மாவட்ட மக்களுக்கு ரூ.4 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. அதனை சங்க தலைவர் ராஜேந்திரன் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். அப்போது செயலாளர் அசோக்குமார், சுதாகர், செந்தில், ஜமீன் வெங்கடேசன் மற்றும் சங்க உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

இதே போல் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. சார்பில் அரிசி, பருப்பு, துணிகள், போர்வை, பிஸ்கெட், தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்ட ரூ.15 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் லாரி மூலம் திருச்சி கலைஞர் அறிவாலயத்துக்கு அனுப்பப்பட்டது. இதனை பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் குன்னம் ராஜேந்திரன் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார், மாவட்ட துணை செயலாளர் தழுதாழை பாஸ்கர், வேப்பந்தட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் நல்லதம்பி, கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் ஜெகதீசன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இருந்து இன்று (வியாழக்கிழமை) பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதே போல பெரம்பலூர் மாவட்டம் சத்திரமனை கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சார்பில், புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணிக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் நேற்று இரவு அனுப்பி வைக்கப்பட்டன.

Next Story