ஆட்டோ தொழிலாளர்கள் சம்மேளன மாநில நிர்வாகிகள் கூட்டம்


ஆட்டோ தொழிலாளர்கள் சம்மேளன மாநில நிர்வாகிகள் கூட்டம்
x
தினத்தந்தி 21 Nov 2018 10:30 PM GMT (Updated: 21 Nov 2018 8:21 PM GMT)

சி.ஐ.டி.யு. தொழிற்சங்கமான தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர்கள் சம்மேளத்தின் மாநில நிர்வாகிகள் மற்றும் மாநிலக்குழு உறுப்பினர்கள் கூட்டம் பெரம்பலூரில் நேற்று நடந்தது.

பெரம்பலூர்,

சி.ஐ.டி.யு. தொழிற்சங்கமான தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர்கள் சம்மேளத்தின் மாநில நிர்வாகிகள் மற்றும் மாநிலக்குழு உறுப்பினர்கள் கூட்டம் பெரம்பலூரில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு சம்மேளத்தின் மாநில தலைவர் குமார் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் சிவாஜி, மாநில பொருளாளர் மனோகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யு. பெரம்பலூர் மாவட்ட துணைத்தலைவர் அகஸ்டின் வாழ்த்துரை வழங்கி னார். சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் மாநில செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மகேந்திரன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை ரத்து செய்து, அரசே கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும். அதனை ஜி.எஸ்.டி வரி விதிப்பு வரைமுறைக்குள் கொண்டு வர வேண்டும். மானிய விலையில் ஆட்டோ தொழிலாளர்களுக்கு பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் வழங்க வேண்டும். 5 ஆண்டுகளாக உயர்த்தப்படாத ஆட்டோ பயணத்துக் கான மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும். மோட்டார் வாகன திருத்த சட்டத்தைக் கைவிட வேண்டும். காப்பீட்டு கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். போக்குவரத்து அலுவலகங்களில் தலைவிரித்தாடும் லஞ்சம், ஊழல் நடைமுறைகளை தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக சி.ஐ.டி.யு. பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ரெங்கநாதன் வரவேற்றார். ஆட்டோ தொழிலாளர்கள் சம்மேளத்தின் மாநில செயல் தலைவர் பாலசுப்பிரமணி நன்றி கூறினார்.

Next Story