கார் மீது லாரி மோதிய கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உடல் நசுங்கி சாவு நாசிக் அருகே துயரம்


கார் மீது லாரி மோதிய கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உடல் நசுங்கி சாவு நாசிக் அருகே துயரம்
x
தினத்தந்தி 21 Nov 2018 11:30 PM GMT (Updated: 21 Nov 2018 10:58 PM GMT)

நாசிக் அருகே கார் மீது லாரி மோதிய கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

நாசிக், 

நாசிக் அருகே கார் மீது லாரி மோதிய கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்து

நாசிக் விசார்பாட்டா பகுதியில் உள்ள மன்மாட்- எவ்லா சாலையில் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் கார் ஒன்று எவ்லா நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிர்திசையில் வேகமாக வந்து கொண்டிருந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக கார் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் கார் அப்பளம்போல் நொறுங்கியது.

லாரி டிரைவர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டார். விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

6 பேர் பலி

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தனர். அப்போது, விபத்தில் சிக்கிய காரில் 6 பேர் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். போலீசார் அவர்களது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் அவர்களது பெயர் பாலாசாகேப் ஆனாட்(வயது60), அவரது மனைவி இந்துபாய், மற்றும் ஸ்ரீநாத் ஆனாட், மோகினி கான்டவே, ஹரி கான்டவே(5), பீமாபாய் ரோகாகாலே(70) என்பதும், இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான லாரி டிரைவரை வலைவீசி தேடிவருகின்றனர்.

Next Story